img Leseprobe Sample

அந்த ரத்த நாட்கள்

ராஜேஷ்குமார்

EPUB
ca. 1,38
Amazon iTunes Thalia.de Weltbild.de Hugendubel Bücher.de ebook.de kobo Osiander Google Books Barnes&Noble bol.com Legimi yourbook.shop Kulturkaufhaus
* Affiliate Links
Hint: Affiliate Links
Links on findyourbook.com are so-called affiliate links. If you click on such an affiliate link and buy via this link, findyourbook.com receives a commission from the respective online shop or provider. For you, the price doesn't change.

Pocket Books img Link Publisher

Belletristik / Spannung

Description

‘ரூபலா...”
‘பாரத்’தை தூங்கப் பண்ணிக்கொண்டிருந்த ரூபலா திரும்பினாள். விவேக் ஒரு ஆங்கில வார இதழை கையில் வைத்துக் கொண்டு சிரித்தபடி தெரிந்தான். இரவு பத்துமணி இடம் சென்னை.
“என்னவாம்...?’’
“ஒரு சர்தார்ஜி ஜோக் சொல்லட்டுமா...?’’
“ச்சே...! அந்த மாதிரியான ஜோக்கெல்லாம் என்கிட்டே வேண்டாம்...”
விவேக் அவளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.
“அய்யய்யே...! நீ நினைக்கிற மாதிரி அது செக்ஸ் ஜோக் கிடையாது.’’
“பின்னே...?”
“சொல்றேன் கேட்டுப்பாரு...’’
“சரி சொல்லுங்க...”
“ஒரு சர்தார்ஜி தவளைகளைப் பத்தி ஆராய்ச்சி பண்றதுல ஒரு பெரிய விஞ்ஞானி. அவரோட ஆராய்ச்சி திறமைக்கு சாம்பிளா ஒரு எக்ஸ்பரிமெண்ட். ஒரு தவளையை பிடிச்சு மேஜைமேல விட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னாராம். உடனே அது தாவி குதிச்சது. உடனே சர்தார்ஜி அந்த தவளையை பிடிச்சு அதனோட நாலு கால்ல ஒரு காலை வெட்டிட்டு மேஜைமேல விட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னாராம். தவளை தன்னோட மூணு காலையும் உபயோகிச்சு குதிச்சதாம். சர்தார்ஜி அந்த தவளையை மறுபடியும் மூணுகால்ல ஒரு காலை வெட்டிட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னாராம். தவளை ரெண்டு காலை உபயோகிச்சு குதிச்சது. சர்தார்ஜி விடலை. தவளையை பிடிச்சு ரெண்டு கால்ல ஒண்ணை வெட்டிட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னார். தவளை கஷ்டப்பட்டு முயற்சி பண்ணி ஒரு காலை உபயோகிச்சு ‘ஜம்ப்’ பண்ணியதாம். சர்தார்ஜி மறுபடியும் தவளையைப் பிடிச்சார். இருந்த ஒரு காலையும் வெட்டிட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னார். அது குதிக்காமே அப்படியே படுத்திட்டிருந்தது. உடனே சர்தார்ஜி தன்னோட ஆராய்ச்சிக் குறிப்பில் இப்படி எழுதினாராம். தவளைக்கு அதன் நான்கு கால்களையும் வெட்டி விட்டால் காது கேட்காது...”
ரூபலா வாய்விட்டு சிரித்துக் கொண்டிருக்கும் போதே - வாசலில் காலிங்பெல் கேட்டது.
“டி... டிங்...’’
விவேக் கையிலிருந்த பத்திரிகையை மேஜை மேல் வீசிவிட்டு எழுந்தான்.
‘‘இந்நேரத்துக்கு யார்ன்னு தெரியலை...?”
வாசல்பக்கம் போன விவேக் - போலீஸ் துறைக்கு உரிய முன் யோசனையோடு பக்கவாட்டு ஜன்னலைத் திறந்து வாசலைப் பார்த்தான்.
ஒரு இளைஞன் நின்றிருந்தான். முப்பது வயது இருக்கலாம். தெரு விளக்கின் வெளிச்சம் மேலே விழுந்ததில் அவனுடைய நிறம் தெரிந்தது. தாடி வளர்க்க ஆரம்பித்திருந்தான். கண்களுக்கு கீழே மெலிதாய் கருவளையங்கள். தோளில் ஒரு ஜோல்னா பை.
“யாரு...?”
விவேக் கேட்க -
அவன் சட்டென்று குரல் வந்த பக்கமாய் திரும்பி - க்ரில் ஜன்னலில் தெரிந்த விவேக்கைப் பார்த்துகும் பிட்டான்.
“வணக்கம் ஸார்... என் பேர் சங்கரநாராயணன். உங்களைப் பார்த்து பேசறதுக்காகத்தான் வந்தேன்...’’
அவனுடைய குரலும் முகபாவமும் இவன் ஆபத்தானவன் இல்லை என்பதை விவேக்கிற்கு உணர்த்த - கதவுக்கு போய் தாழ்ப்பாளை விலக்கினான்.
அந்த சங்கரநாராயணன் உள்ளே வந்தான். மறுபடியும் வணக்கம் சொன்னான்ஸார்! ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி உங்கக்கிட்டே பேசணும். நீங்க வீட்ல இருப்பீங்களோ... இல்லை... வெளிநாடு ஏதாவது போயிருப்பீங்களோன்னு பயந்துட்டே வந்தேன்.”
‘‘என்ன விஷயம்...?’’
‘‘உட்கார்ந்து பேசணும் ஸார்... எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம்...’’
விவேக் வரவேற்பறையிலிருந்த நாற்காலியைக் காட்டிவிட்டு தானும் உட்கார்ந்தான்.
“ம்... சொல்லு...’’ அவன் மெல்லிய குரலில் பேச்சை ஆரம்பித்தான்.
‘‘எனக்கு சொந்த ஊர் காங்கயம் ஸார். என்ஜினீயரிங் படிச்சு முடிச்சுட்டு வேலைக்காக ட்ரை பண்ணிட்டிருக்கேன்...
‘‘சரி...’’
‘‘ஸ... ஸார்... நான் இப்போ உங்ககிட்டே சொல்லப் போற விஷயம் என்னோட எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடியதுதான், இருந்தாலும்... அதைப் பத்தி கவலைப்படாமே உங்ககிட்டே வந்திருக்கேன்...’’
‘‘நீ இன்னும் விஷயத்துக்கே வரலை...’’
“வந்துட்டேன் ஸார்...” சொன்னவன் தன்னுடைய ஜோல்னாப்பைக்குள் கையை நுழைத்து ஆடியோ காஸெட் ஒன்றை எடுத்தான்.
“இதை டேப் ரிக்கார்டரில் போட்டுப் பாருங்க... ஸார்...
விவேக் அந்த கேஸட்டை வாங்கி - திருப்பிப் பார்த்து - அது ஒரு சாதாரண கேஸட்தான் என்று ஊர்ஜிதமானதும் - உள்ளே போய் ரிக்கார்ட் பிளேயரைக் கொண்டு வந்து - கேஸட்டை அதன் வாய்க்குள் திணித்து - ப்ளே பட்டனைத் தட்டினான்.
டேப் சுழன்றது.
காஸட்டினின்றும் வெளிப்பட்ட வார்த்தைகள் -விவேக்கை அதிர்ச்சியில் வீழ்த்தியது. இருதயத்துக்குள் ஒரு பூகம்பம் பதிவாயிற்று

More E-books By This Author
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
More E-books At The Same Price
Cover ஒற்றை மேகம்
ராஜேஷ்குமார்
Cover லேகா என் லேகா
ராஜேஷ்குமார்
Cover அந்த ரத்த நாட்கள்
ராஜேஷ்குமார்
Cover தப்பு + தப்பு = சரி
ராஜேஷ்குமார்
Cover சிறகடிக்க ஆசை!
ராஜேஷ்குமார்
Cover கருநாகபுர கிராமம்
ராஜேஷ்குமார்
Cover வானவில் குற்றம்
ராஜேஷ்குமார்
Cover புதிய பாடல் பாடு
ராஜேஷ்குமார்
Cover திக் திக் டிசம்பர்
ராஜேஷ்குமார்
Cover கண்ணை நம்பாதே
ராஜேஷ்குமார்
Cover முடிந்தால் உயிரோடு
ராஜேஷ்குமார்

customer reviews

Keywords

Antha Ratha Naatkal, detective, suspense, crime novel, rajeshkumar, thriller