img Leseprobe Leseprobe

பார்வைகள் புதிதா?

ஆர்.சுமதி

EPUB
ca. 1,38
Amazon iTunes Thalia.de Weltbild.de Hugendubel Bücher.de ebook.de kobo Osiander Google Books Barnes&Noble bol.com Legimi yourbook.shop Kulturkaufhaus
* Affiliatelinks/Werbelinks
Hinweis: Affiliatelinks/Werbelinks
Links auf reinlesen.de sind sogenannte Affiliate-Links. Wenn du auf so einen Affiliate-Link klickst und über diesen Link einkaufst, bekommt reinlesen.de von dem betreffenden Online-Shop oder Anbieter eine Provision. Für dich verändert sich der Preis nicht.

Pocket Books img Link Publisher

Belletristik/Erzählende Literatur

Beschreibung

தேவஸ்ரீ வீட்டிற்கு வந்தபோது, சமைத்துக் கொண்டிருப்பது அடுப்பு புகையின் வாசனையின் மூலம் தெரிந்தது.
மதியம் அடக்கி வைத்திருந்த பசி அவளைக் கொன்று விடும் சக்தியோடு எழுந்தது. உள்ளே வந்தவள் சுவரிலிருந்த பெரிய ஆணியில் புத்தகப் பையை மாட்டினாள்.
“அம்மாடி...வந்துட்டியா...?” என்றபடியே அம்மா விறகை இழுத்துத் தீயைக் குறைத்து வைத்துவிட்டு எழுந்து வந்தாள்.
“ராஜாத்தி...மத்தியானம் எதாவது சாப்பிட்டியாடா?”
“இல்லை நீ எதுவும் தராம நான் எப்படிச் சாப்பிட முடியும்?”
“உன் சிநேகிதிங்க யாரும் உன்னைச் சாப்பிடக் கூப்பிடலையா? அந்த மீனாப் பொண்ணு உன் மேல உசிரையே விடுவாளே, அவ கூட உன்னைச் சாப்பிடக் கூப்பிடலையா?”
“கூப்பிட்டா, நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன்.”
“ஏம்மா...? சினேகிதிங்க கிட்ட சாப்பிடறதுல என்ன தயக்கம் உனக்கு. அந்த மீனா பொண்ணு உன் மேல எவ்வளவு
அன்பு வச்சிருக்கா. நீ அடிக்கடி அவளை பத்தித்தானே பேசிக்கிட்டிருப்பே.”
“அவகிட்ட சாப்பிடறதுல எனக்கொண்ணும் தயக்கமில்லை. ஆனா...நீ பட்டினியோடு வேலை செய்துக்கிட்டிருக்கும் போது நான் மட்டும் எப்படிச் சாப்பிட முடியும்?”
கேட்கும்போதே தேவஸ்ரீயின் கண்கள் கலங்கி விட்டன.
அம்மா வேதம் அவளுடைய கைகளை பற்றினாள். விரல்கள் நடுங்கினஅம்மாடி...உங்கப்பா செத்துப் போனதுமே, என் மனசு மட்டும் இல்லைம்மா, என் வயிறும் மரத்துப் போயிடுச்சு. பசிக்கறதை உணர்ந்தே ரொம்ப நாளாயிடுச்சு. ஆனா... நீ அப்படியா? வயசுப் பொண்ணு. உன் வயித்தைப் பட்டினி போடக் கூடாதுன்னு நானும் எவ்வளவோ கஷ்டப்படறேன். ஆனா. சில நாள் இப்படி ஆயிடுது. வா...சூடா சாதம் பொங்கி வச்சிருக்கேன். சாப்பிடு!” என்று அழைத்துச் சென்றாள்.
வடித்திருந்த சோற்றை நிமிர்த்தி ஆவி பரக்கத் தட்டில் போட்டுக் கருவாட்டுக் குழம்பை ஊற்றினாள்.
“அம்மா! நீயும் சாப்பிடு.”
இன்னொரு தட்டை எடுத்து அம்மாவிடம் நீட்டினாள்.
வேதம் அந்தத் தட்டிலும் சாதத்தை போட்டுக் குழம்பை ஊற்றினாள்.
பசி மயக்கத்தில் அரக்கப் பரக்கச் சாப்பிட்டாள் தேவஸ்ரீ. அவள் பரக்கப் பரக்கச் சாப்ப்பிட்டதாக கண்ணில் நீர் வரப் பார்த்த தாய்க்கு இதயத்தைப் பிசைந்தது.
‘கடவுளே! என் குழந்தையின் பசியைக் கூட நேரா நேரத்திற்குத் தீர்க்க முடியவில்லையே!’
“அம்மாடி...டவுன்லதானே அக்கா வீடு இருக்கு. அங்க போய்ச் சாப்பிட்டிருக்கலாமே!”
“ப்ச்! அக்காவாயிருந்தா என்ன? கட்டிக் கொடுத்துட்டா வேறுதான். சாப்பாட்டுக்கெல்லாம் அக்கா வீட்ல போய் நிக்கறது நல்லதில்லை. கல்யாணம் பண்ணிக் கொடுத்த பின்னாடி தூர நிக்கறதுதான் எல்லாத்துக்கும் நல்லது.”
“அப்போ...நாளைக்கு உன்னையும் கல்யானம் பண்ணிக் கொடுத்துட்டா நான் பசின்னு உன் வீட்ல வந்து நிக்கக் கூடாதா?”
வேதம் இப்படிக் கேட்கவும் நெருப்பையள்ளிக் கொட்டியதை போல் துடித்துப் போய் விட்டாள் தேவஸ்ரீ .
“அம்மா....என்ன...என்ன பேசற நீ? அக்காவும் நானும் ஒண்ணா? என்னை அப்படியே உதறிட்டுப் போய்ட முடியுமா? இப்ப நீ படற அத்தனை கஷ்டமும் எனக்காகத் தானே. ஆண் பிள்ளை இல்லாத உன்னைக் கடைசி வரை வச்சுக் காப்பாத்த வேண்டியது என்னோட கடமை இல்லையா? ஏன்... இப்படியெல்லாம் பேசறே?சாப்பிடறது கூட உடம்புல ஒட்டாது போலிருக்கு. எனக்குச் சோறும் வேண்டாம். ஒண்ணும் வேண்டாம்.”
சட்டென்று தேவஸ்ரீ எழ முயல, அம்மா பதறி விட்டாள்

Weitere Titel von diesem Autor
ஆர்.சுமதி
ஆர்.சுமதி
ஆர்.சுமதி
ஆர்.சுமதி
ஆர்.சுமதி
Weitere Titel in dieser Kategorie
Cover கற்பூர ஜோதி
ஆர்.சுமதி
Cover சினேகிதனே...
ஆர்.சுமதி
Cover மறவாதே மனமே!
ஆர்.சுமதி
Cover பொன்னாடை
ஆர்.சுமதி
Cover பாச மலர்கள்
ஆர்.சுமதி

Kundenbewertungen

Schlagwörter

R.Sumathi, romance, Kudumba Novel, relationship, family stories, drama, contemporary fiction